MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கைது : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கைது : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
Share
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.comMDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com > All news > அரசியல் > மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கைது : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
அரசியல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கைது : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்

இந்த நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் கைதுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

Deepaksanth S
Last updated: August 11, 2025 9:10 pm
Deepaksanth S
Share
SHARE

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்ட எம்பிக்களை கைது செய்தனர். டெல்லியில் பேரணியை போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியபோது கைது செய்தனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் கைதுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள்…

— TVK Vijay (@TVKVijayHQ) August 11, 2025

சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.

ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
TAGGED:Election CommissionRahul GandhiTVK Vijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்
Next Article Coolie : வெளியீட்டிற்கு முன்பே ₹250 கோடி வசூல், ₹1,000 கோடி வசூலிக்குமா.?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

By
Deepaksanth S
3 Min Read

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By
Deepaksanth S
2 Min Read

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Oponion

You Might Also Like

இந்தியா

சில அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அரசியல்…

2 Min Read
அரசியல்

வடமாநிலத்தவர்களுக்கு வாக்கு உரிமை கொடுத்தால் தமிழக அரசியலே மாறிவிடும்.. திருமாவளவன்

வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாகச் சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப்போகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முடிவு…

1 Min Read
senthil-balaji-brother-america-medical-treatment-case-high-court-order
அரசியல்தமிழ்நாடு

அமெரிக்கா செல்ல செந்தில் பாலாஜி தம்பிக்கு என்னென்ன நிபந்தனைகள்?

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சொந்தமான இடங்களில்…

3 Min Read
அரசியல்

திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், EDக்கும் அஞ்சமாட்டார்கள் – ஆர்.எஸ். பாரதி

பாஜக வாஷிங் மெஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள்; பொய் வழக்கு போடப்பட்டவர்கள். அதனை நீதிமன்றத்தில் நிரூபித்து காட்டி, வெளியே வருவோமே…

1 Min Read
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Cinema

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்
  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்
  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்
  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • About
  • Terms & Conditions
  • Work with Us
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?