MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
Share
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.comMDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com > All news > TN ELECTION 2026 > தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
TN ELECTION 2026

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Deepaksanth S
Last updated: April 3, 2026 8:37 am
Deepaksanth S
Share
SHARE

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த பல்வேறு மாற்றங்களை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ஏ. அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ. லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்‌ஷித் பொறுப்பேற்றுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி. சரவண சுந்தருக்கு பதிலாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுமதித்துள்ள தேர்தல் ஆணையம், பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்தப் படையினரை தமிழகத்திற்கு அனுப்பி வருகிறது.

மார்ச் 30ஆம் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டதுடன், வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, சில இடங்களில் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர் புகார் அளித்தார்.

மேலும், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து வேட்பாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபிக்கு அறிவுறுத்தினார். சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், விருதுநகர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் எஸ்பிக்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில், மேலும் பல ஐஏஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
TAGGED:DGPSandeep Rai RathoreTN Election 22026
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்
Next Article தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

By
Deepaksanth S
3 Min Read

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Asia Cup 2025 : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

By
Deepaksanth S
1 Min Read

Oponion

MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Cinema

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்
  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்
  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்
  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • About
  • Terms & Conditions
  • Work with Us
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?