சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ் திரையுலகின் முதல் ₹1,000 கோடி வசூல் செய்யும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெளியாகும் அதே நாளில் ‘வார் 2’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படம், ₹375 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
“கூலி” திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ₹250 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் நாளில் உலக அளவில் ₹100-150 கோடி வசூலை எட்டும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். ஆகஸ்ட் 15 நெருங்கி வரும் நிலையில், ‘கூலி’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ‘வார் 2’ திரைப்படத்துடன் நேரடியாக மோதவிருந்தாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படம் குறித்த ஆர்வமே அதிகம் உள்ளது. வார் 2 படத்தை விட பல மடங்கு புக்கிங் தியேட்டர்களில் நடந்து வருகிறது.
‘கூலி’ திரைப்படம், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘லியோ’வின் சாதனையை முறியடித்துள்ளது. பல காட்சிகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முதல் நாள் வசூல் 2 மில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். ரஜினிகாந்தின் வரவிருக்கும் அதிரடிப் படமான ‘கூலி’, வெளியீட்டிற்கு முன்பே வட அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் புயலைக் கிளப்பியுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க சந்தையிலிருந்து மட்டும் $1,447,203 வசூலித்துள்ளது. மேலும், 56,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன.


