திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


