MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
Share
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live UpdatesMDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates > All news > தமிழ்நாடு > தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 11.19 விழுக்காடாக இரட்டை இலக்க எண்ணை எட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Deepaksanth S
Last updated: August 7, 2025 7:44 pm
Deepaksanth S
Share
SHARE

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பது Talk of the Nation ஆக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்னால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். நேற்று இரவில் இருந்து இதுதான் Talk of the Town, ஏன் Talk of the Nation என்பதே இதுதான். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 11.19 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்பது தான் அந்த மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, நாம் கணித்ததை விட, கிட்டத்தட்ட 2.2 விழுக்காடு அதிகம். முன்பு 9.69 விழுக்காடு என்று மதிப்பிடப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் இப்போது 11.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, 2010-11 ஆம் நிதியாண்டில் கலைஞர் ஆட்சியில் தான், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்காடாக இருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் திமுக ஆட்சியில், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியிருக்கிறது.

இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி. இது பல்வேறு நெருக்கடிகள், அவதூறுகளுக்கு இடையில் வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். இது தனிப்பட்ட ஸ்டாலினின் வெற்றி இல்லை. அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சர், அனைத்துத் துறை அதிகாரிகள், கடைநிலை அரசு ஊழியர்கள் என்று ஒவ்வொரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்திய நம்முடைய எல்லாருடைய உழைப்புக்கும் கிடைத்திருக்கக்கூடிய கூட்டு வெற்றி இது.

என்னை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த நேரத்தில், இந்த வெற்றிச் செய்தியை நான் காணிக்கையாக்குகிறேன். “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கோடு பயணிக்கும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான வெற்றிப் பயணத்திற்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரம் தான் இது. இந்த மகிழ்ச்சியான செய்தியுடன், இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் வாய்ப்பை பெற்றதற்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்த நான்கு ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி, டிஎன்யூஎஸ்ஆர்பி உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவும், நகராட்சி நிர்வாகம், கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை மற்றும் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாகவும், 1,08,111 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, “நான் முதல்வன்” திட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 3,28,393 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, 2,65,223 பேருக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம். மேலும் விளையாட்டுத் துறையில் முதன்முறையாக தேசிய மற்றும் உலகளவில் சாதனை படைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதன்மூலம் 84 நபர்களுக்கு இந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தில், பயிற்சி பெற்ற 89 இளைஞர்கள் பல்வேறு முக்கிய ஒன்றிய அரசுப் பணிகளில் இடம்பிடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் படித்த 18 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது இப்படி, மொத்தம் 6,41,664 பேர், கடந்த நான்காண்டுகளில், பணி நியமனம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
TAGGED:Cm MK StalinTalk of the nationTamilnadu Economy
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article விஜய்காந்த் படத்தை பயன்படுத்தக்கூடாது: பிரேமலதா திடீர் உத்தரவு
Next Article KARUNANIDHI 7TH DEATH ANNIVERSARY : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Asia Cup 2025 : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

By
Deepaksanth S
1 Min Read

TNPSC : குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை…

By
Sri Prem Kumar
2 Min Read

த.வெ.க கட்சி மாநாடு – மதுரையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்று பாதையில்…

By
Deepaksanth S
4 Min Read

சில அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

By
MDTV 24x7 News
2 Min Read

Oponion

You Might Also Like

ட்ரெண்டிங்தமிழ்நாடு

Society Paavangal வீடியோ எதிரொலி கோபி – சுதாகர் மீது போலீசில் புகார்.!

Paridhapangal Youtube channel-க்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நெடிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் யூடியூபர்கள் என்றவுடன் நினைவில் உதிக்கும்…

2 Min Read
chennai-high-court-orders-response-to-madurai-adheenam-case-from-police-side
தமிழ்நாடு

மதுரை ஆதீனம் வழக்கு.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு- நீதிமன்றம்

சென்னை காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 6-வது அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய…

2 Min Read
சென்னைதமிழ்நாடு

18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்!!

சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.…

1 Min Read
senthil-balaji-brother-america-medical-treatment-case-high-court-order
அரசியல்தமிழ்நாடு

அமெரிக்கா செல்ல செந்தில் பாலாஜி தம்பிக்கு என்னென்ன நிபந்தனைகள்?

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சொந்தமான இடங்களில்…

3 Min Read
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Technology

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்

Health

  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்

Culture

  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்

More

  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்

Subscribe

  • Home Delivery
  • Digital Subscription
  • Games
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?