சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் Pink Auto Scheme கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக்கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு CNG ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சர்வதேச மகளிர் தினமான 08.03.2025 அன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
இதனை தொடர்ந்து CNG ஆட்டோக்கள் மூன்றாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 15.09.2025 தேதி வரை விண்ணப்பங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் வரவேற்கப்படுகின்றன.