அம்மா- AMMA என்று சொல்லப்படும் கேரள நடிகர் சங்க( Association of Malayalam Movie Actors) தலைவர் பதவிக்கான தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி.
1994-ல் தொடங்கப்பட்ட மலையாள நடிகர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் பெண்கள் குறைந்தளவிலேயே உள்ளனர். சமீபத்தில் ஹேமா கமிட்டி சர்ச்சையால் கலைக்கப்பட்ட தற்போதைய செயற்குழு உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள்.
நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனனும், நடிகர் தேவனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இன்று மதியம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார். இதன் மூலம்
31 ஆண்டு சங்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் தலைவரானார். சமீபத்தில் நிதி ஆதாயத்திற்காக ஆபாசத் திரைப்படங்களில் நடித்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இடைக் காலத் தடை வாங்கியுள்ளார். அதேபோல் பொதுச் செயலாளர் பதவிக்கும் நடிகை குக்கூ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்


