Weather Update : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.


