MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: அமெரிக்கா செல்ல செந்தில் பாலாஜி தம்பிக்கு என்னென்ன நிபந்தனைகள்?
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: அமெரிக்கா செல்ல செந்தில் பாலாஜி தம்பிக்கு என்னென்ன நிபந்தனைகள்?
Share
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live UpdatesMDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates > All news > அரசியல் > அமெரிக்கா செல்ல செந்தில் பாலாஜி தம்பிக்கு என்னென்ன நிபந்தனைகள்?
அரசியல்தமிழ்நாடு

அமெரிக்கா செல்ல செந்தில் பாலாஜி தம்பிக்கு என்னென்ன நிபந்தனைகள்?

அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரின் மனு தொடர்பாகஅமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MDTV 24x7 News
Last updated: August 6, 2025 12:35 am
MDTV 24x7 News
Share
senthil-balaji-brother-america-medical-treatment-case-high-court-order
senthil-balaji-brother-america-medical-treatment-case-high-court-order
SHARE

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அதுநாள் முதல் அசோக் குமார் தலைமறைவானார். அவருக்கு பலமுறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை.

இதனிடையே கைது செய்யப்பட்ட சமயத்தில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை முயன்ற போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சுமார் 14 மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததன் பேரில் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆனால், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நிர்பந்தத்தின் பேரில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதே சமயம் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு அப்போதும் ஜாமீனும் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அசோக் குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அமெரிக்கா செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அமெரிக்கா சென்று வரை 15 நாட்கள் அனுமதி தந்தால் போதும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கத் தயார் என்றும் அசோக்குமார் தரப்பு கூறியது. ஆனால், அசோக் குமார் அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியபோதும் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அத்துடன், விசாரணை பாதிக்கும் என்பதால் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை வாதிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அசோக் குமார் தரப்பில், அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்திய மருத்துவர் அளித்த பரிந்துரை கடிதம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அமலாக்கத் துறை தரப்பில், அமெரிக்கா போவதற்கு முன்பு தன்னுடைய மனைவி, மகளின் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைப்பதாக அசோக் குமார் தெரிவித்தார். தற்போது மனைவியின் பாஸ்போர்ட்டை வழங்க முடியாது என்று கூறுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அசோக் குமார் தரப்பில், “மருத்துவ சிகிச்சைக்காக அசோக் குமாருடன் அவரது மனைவியும் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அவருடைய மகள் மட்டும் இங்கு இருக்கிறார். அதனால் அவரது மகள் பாஸ்போர்ட்டை சமர்பிக்க தயாராக இருக்கிறோம். அசோக்குமார் செப்டம்பர் 4ஆம் தேதி அமெரிக்காவில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் உள்ளது. அசோக் குமார் எங்கேயும் தலைமறைவாக மாட்டார். அப்படி தலைமறைவானது உண்டாக்கும் பின் விளைவுகள் அவருக்கு தெரியும்” என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அசோக் குமாருக்கு என்ன மாதிரியான நிபந்தனைகள் விதிக்கலாம் என்று அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நாளைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article BSNL – வெறும் ₹1-க்கு செம்ம ஆஃபர்.
Next Article chennai-high-court-orders-response-to-madurai-adheenam-case-from-police-side மதுரை ஆதீனம் வழக்கு.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு- நீதிமன்றம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Asia Cup 2025 : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

By
Deepaksanth S
1 Min Read

TNPSC : குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை…

By
Sri Prem Kumar
2 Min Read

த.வெ.க கட்சி மாநாடு – மதுரையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்று பாதையில்…

By
Deepaksanth S
4 Min Read

சில அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

By
MDTV 24x7 News
2 Min Read

Oponion

You Might Also Like

தமிழ்நாடு

தூய்மை பணியாளருக்கான சிறப்பு திட்டங்கள் – தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துாய்மைப்பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பது Talk of the Nation ஆக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை…

3 Min Read
சென்னைதமிழ்நாடு

18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்!!

சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.…

1 Min Read
அரசியல்

அன்புமணி தலைமையில் ராமதாஸ் இன்றி நடைபெறும் முதல் பாமக பொதுக்குழு கூட்டம்

அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கி இருக்கிறது. ராமதாஸ் எதிர்ப்புக்கு மத்தியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. மேடையில் ராமதாஸ்-க்கு ஒருக்கை ஒதுக்கீடு…

1 Min Read
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Technology

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்

Health

  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்

Culture

  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்

More

  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்

Subscribe

  • Home Delivery
  • Digital Subscription
  • Games
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?