MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: தூய்மை பணியாளர்கள் போராட்டம் : சென்னை மாநகராட்சி விளக்கம்
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: தூய்மை பணியாளர்கள் போராட்டம் : சென்னை மாநகராட்சி விளக்கம்
Share
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live UpdatesMDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates > All news > தமிழ்நாடு > சென்னை > தூய்மை பணியாளர்கள் போராட்டம் : சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னைதமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் போராட்டம் : சென்னை மாநகராட்சி விளக்கம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் இராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025 மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 01.08.2025 முதல் வேலை நிறுத்தத்தில் சுய உதவிக் குழுவின் வாயிலாக பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

MDTV 24x7 News
Last updated: August 12, 2025 12:51 pm
MDTV 24x7 News
Share
SHARE

பெருநகர சென்னை மாநகராட்சியில் இராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025 மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 01.08.2025 முதல் வேலை நிறுத்தத்தில் சுய உதவிக் குழுவின் வாயிலாக பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன், நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு ஊர்டுகளின் எண்ணிக்கை 155ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டு, 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட போது. திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளத் தேவைப்படும் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (MJLM) கீழ்உதவிக் குழுக்கள் மூலமாக தற்காலிக அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த முறையில் வருகை அடிப்படையில், தினக்கூலி ஊதியம் கனாக்கிடப்பட்டு, அவர்களை பணியில் ஈடுபடுத்திய சுய உதவி குழுவின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகிறது.

பின்னர், அந்த வங்கி கணக்கிலிருந்து தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் ஊதியமானது ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கும் சுய உதவி குழுவால் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மேற்கூறிய வெளி முகமைப் பணியானது (Outsourcing) சுய உதவி குழுக்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் எஞ்சியுள்ள நான்கு மண்டலங்களில், மண்டலம் 5 மற்றும் 6 இல் மேற்கூறிய அதே முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த மாற்றத்தின் போது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் புதிய நிறுவனத்தின் கீழ் இணைந்து பணியாற்றிட வழிவகை செய்யப்பட்டது.

சென்ற ஆண்டுகளில் 11 மண்டலங்களில் தூய்மை பணி முறை மாற்றப்பட்டபோது செயல்படுத்தப்பட்ட அதே நடவடிக்கைகள் தற்போதும் பின்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த இரண்டு மண்டலங்களில், சுய உதவிக்குழு அமைப்பின் கீழ் பணியாற்றி வந்த தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் இதனை ஏற்காமல், தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரிய மாட்டோம் என்றும் வலியுறுத்தி ரிப்பன் வளாகத்தின் முன்புறத்தில், கடந்த 01.08.2025 முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கி நடத்தி கட்டட வருகின்றனர். இதனால் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக சென்னை மாநகராட்சிக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

மண்டலம் 5 மற்றும் 6-ல் வசிக்கும் மற்றும் வந்து செல்லும் ஏறத்தாழ 20 லட்சம் பொதுமக்களுக்கான பொது சுகாதார சேவைகள் பாதிக்கப்படுவது மிக முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

போராட்டம் தொடர்வதால் இந்த மண்டலங்களில் தூய்மைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு குப்பைகள் தேங்கி மக்களுக்கு பெரும் சுகாதார பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சென்னை மாநகராட்சிக்கு உள்ளதால் இதற்கான அனைத்து முயற்சிகளையும் சென்னை பெருநகர மாநகராட்சி தொடர்ந்து எடுத்து வருகின்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, பல்வேறு மண்டலங்களில் பணிபுரிந்து விருப்பக் கடிதம் அளித்த 4994 பணியாளர்களும் உர்பேசர் (Urbaser) மற்றும் ராம்கி (Ramky) ஆகிய தனியார் நிறுவனங்களில், அச்சமயம் பணியில் ஈர்த்துக் கொள்ளப்பட்டனர்.

மண்டலம் 5 மற்றும் 6ல் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணிகள் ராம்கி (Ramky) நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, 16.07.2025 முதல் அந்நிறுவனம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம். ஒப்பந்தப்படி, மொத்தம் 3,809 தூய்மைப் பணியாளர்களை பணியில் நியமிக்க வேண்டும்.

தற்போது வரை 1.770 பணியாளர்களை இந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. மீதமுள்ள 2.039 பணியிடங்கள். ஏற்கனவே பணியாற்றி வந்த சுய உதவிக் குழுக்களின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தலின்படி ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் 300 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எந்தவொரு தற்காலிக தூய்மைப் பணியாளரும் நீக்கப்படவோ, பணி மறுப்பு செய்யப்படவோ இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

இதுநாள் வரை சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தற்போது தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனவே இந்த புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப்பாதுகாப்பும் பல சலுகைகளும் இந்தப் பணியாளர்களுக்கு கிடைத்திட வழி ஏற்பட்டுள்ளது. இப்பணியாளர்களுக்கு

  1. வருங்கால வைப்பு நிதி (PF).
  2. ஊழியம் மற்றும் மருத்துவக்காப்பீடு (ESI).
  3. போனஸ், பண்டிகை கால சிறப்பு உதவிகள்,
  4. 5.திருமண உதவித்தொகை மற்றும் கல்வி/ உயர்கல்வி உதவித்தொகை,
  5. இன்சூரன்ஸ் திட்டத்தில் விபத்து மரணம்/ இயற்கை மரணம் உள்ளிட்டவற்றிற்கு நிவரண இழப்பீடுநிதியும் வழங்கப்படுகின்றன.
  6. ஆண்டுதோரும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன.

தொழிளாலர் நல நிதி

  1. திருமண உதவித் தொகை – ரூ. 20,000/- வரை
  2. கல்வி உதவித் தொகை ரூ.12,000/- வரை
  3. மரண நிகழ்வுக்கான நிதி உதவி
  4. புத்தகத்திற்கான நிதி உதவி
  5. கணினி பயிற்சி நிதி உதவி

விடுப்பு மற்றும் விடுமுறை நாட்கள் பலன்கள்

  1. தற்செயல் விடுப்பு 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு)
  2. ஈட்டிய விடுப்பு 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு)
  3. தேசிய விடுமுறை நாட்கள் (இரட்டிப்பு சம்பளம் பெரும் வசதியும் உண்டு) பணியாளர்கள் இந்த நாட்களில் பணி செய்யாவிட்டாலும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் பெறும் வசதி உண்டு.

பணி மற்றும் ஊதிய விவரங்கள் குறித்து விரிவாக தற்காலிக பணியாளர்களின் பிரிவினர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுவின் மூலமாக பணிகளை செய்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தனியார் நிறுவனம் பணியில் சேர்ப்பதையும் அவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு மற்றும் பணப் பலன்கள் வழங்குவதையும் பெருநகர சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும். தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும். உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
TAGGED:GCCGreater Chennai CorporationMayor Priya rajanPK Sekar babusanitary workers protest
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article Coolie : வெளியீட்டிற்கு முன்பே ₹250 கோடி வசூல், ₹1,000 கோடி வசூலிக்குமா.?
Next Article 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Asia Cup 2025 : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

By
Deepaksanth S
1 Min Read

TNPSC : குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை…

By
Sri Prem Kumar
2 Min Read

த.வெ.க கட்சி மாநாடு – மதுரையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்று பாதையில்…

By
Deepaksanth S
4 Min Read

சில அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

By
MDTV 24x7 News
2 Min Read

Oponion

You Might Also Like

க்ரைம்திருப்பூர்

வரதட்சணை கொடுமை : திருப்பூரில் மேலும் ஒரு பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா…

0 Min Read
தமிழ்நாடு

Tamilnadu State Education Policy : மாநில கல்விக் கொள்கை இன்று வெளியீடு.

மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். மத்திய…

1 Min Read
சென்னைதமிழ்நாடு

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமிக்க தடை இல்லை – உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும்…

2 Min Read
சென்னைதமிழ்நாடு

KARUNANIDHI 7TH DEATH ANNIVERSARY : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ’திமுக அமைதி பேரணி’ நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம்…

2 Min Read
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Technology

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்

Health

  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்

Culture

  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்

More

  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்

Subscribe

  • Home Delivery
  • Digital Subscription
  • Games
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?