பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி MP-க்குள் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மோடியின் தலைமையில் சர்வாதிகார நாடாக மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அமித்ஷா தாக்கல் செய்த 130-வது அரசமைப்பு திருத்தம், சீர்திருத்தம் அல்ல அது ஒரு கருப்பு மசோதா என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் இந்த மசோதாவை கண்டிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து, அவர்களை கைது செய்து ஆட்சியில் இருந்து அகற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்