கடந்த 27.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன கவின் என்பவரை திருநெல்வேலி மாவட்டத்தில் வைத்து சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். பல போராட்டங்களுக்குப் பிறகு அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்த படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் டாக்டர் திவாகர் YouTube சேனலில் பேட்டியளிக்கும் போது சுர்ஜித் என்பவர் என்னுடைய முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று வெளிப்படையாக தன்னுடைய சமூகத்தை சொல்லி இந்த ஆணவப் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளிக்கும் போது ஜி.பி முத்து என்பவரை பற்றி நெறியாளர் கேள்வி கேட்கும் போது டாக்டர் திவாகர் என்பவர் ஜி. பி முத்து என்பவரது சமூகத்தை குறிப்பிட்டு அவர் Low caste என்று சொல்லி அவரைப் பற்றி பேசி தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இதுபோன்று வெளிப்படையாக திவாகர் பொதுவெளியில் தான் சார்ந்த சமூகத்தை உயர்ந்த சாதியாகவும் மற்ற சமூகங்களை கீழ் சாதியாகவும் பேசி வரும் இந்த திவாகர் என்பவரை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சமூக நல்லிணத்தை கெடுக்கும் வகையில் பேட்டி அளித்து வரும் டாக்டர் திவாகர் என்பவரது மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என ஷகிலா அந்த புகாரில் தெரிவித்துள்ளார்


