இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டிக்டாக் தளம் மீண்டும் செயல்பட தொடங்கதியாகச் செய்திகள் பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் காரணமாக டிக்டாக் உள்ளிட்ட பல சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. கடந்த சில நாட்களாக டிக்டாக் செயலி மீதான தடை செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சீனாவின் `டிக்டாக்’ செயலிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஒன்றிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, டிக் டாக் செயலியில் வீடியோக்களைப் பார்க்க அவர்களால் உள்நுழைய முடியவில்லை. வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தின் பயன்பாடு ஆப் ஸ்டோர்களில் கிடைக்கவில்லை