தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, மதுரையில் வரும் 25-ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த பின், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தவெக-வின் 2-வது மாநில மாநாடு, வரும் 18-ம் தேதியிலிருந்து 22-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் நடைபெறும் என கூறியுள்ள ஆனந்த், அந்த தேதி என்ன என்பதை, கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு. ஆகஸ்ட் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக, ஜூலை மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணியும் நடைபெற்றுது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், மாநாடு தொடர்பாக அனுமதி கோரும் மனுவை அளித்தார். இந்த சூழ்நிலையில், தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


