அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கி இருக்கிறது. ராமதாஸ் எதிர்ப்புக்கு மத்தியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. மேடையில் ராமதாஸ்-க்கு ஒருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்கவில்லை. பாமக வரலாற்றில் ராமதாஸ் பங்கேற்காத முதல் பொதுக்குழு இதுவாக அமைந்திருக்கிறது.
பொதுக்குழு கூட்ட மேடையில், அன்புமணி உள்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸுக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு கூட்ட மேடைக்கு வந்தபோது, அன்புமணி, நாளைய தமிழகம் யார் என கேள்வி எழுப்ப, அன்புமணி என பொதுக்குழுவில் பங்கேற்றிருந்தவர்கள் பதில் கொடுத்தனர். பாமக பொதுக்குழு கூட்டத்தில் 100 சதவீத உறுப்பினர்கள் வந்திருப்பதாக கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் வழியில் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம், அதற்கு எல்லோரும் ஒன்றுபடுவோம் என்று முழக்கம் எழுப்பப்பட்டது. இன்று தொடங்கிய பொதுக்குழுவில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி, அவரே கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிகாரம் பெற்றவர் உள்ளிட்டத் தீரமானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


