சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துாய்மைப்பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்
தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.
பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்
தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் .
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள்
கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை
மேலும் தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதனை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து சாப்பிடுவதற்கும், பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக காலை உணவு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.


