விவசாயிகள் இணையதள வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், இணையதள வழியில் பயிர் கடனுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகள் வங்கி கணக்கில் கடன் தொகையை வரவு வைக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பயனாளிகளுக்கு இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர், “வரலாற்று சிறப்புமிக்க ஒகேனக்கல் உள்ள தருமபுரி மாவட்டத்தில் ரூ.512.52 கோடி மதிப்பில் 1044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், ரூ.362.77 கோடியில் முடிவுற்ற 1073 திட்டப் பணிகளை வழங்கி உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.