அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தியுள்ள குறைந்த விலை மற்றும் கவர்ச்சிகரமான சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் அன்லிமிடட் அழைப்பு, ஒரு நாளைக்கு 2GB அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வெறும் 1 ரூபாய்க்கு தருகிறது. இந்த சலுகை குறிப்பாக புதிய BSNL வாடிக்கையாளர்களுக்கானது, இதன் நோக்கம் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் முடிந்தவரை பலரை சென்றடைவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
BSNL’s Freedom Offer – Only @ ₹1!
Enjoy a month of digital azadi with unlimited calls, 2GB/day data 100 SMS & Free SIM.
Free SIM for New Users.#BSNL #DigitalIndia #IndependenceDay #BSNLFreedomOffer #DigitalAzadi pic.twitter.com/aTv767ETur
— BSNL India (@BSNLCorporate) August 1, 2025
இந்த சலுகை குறித்த தகவலை BSNL தனது அதிகாரப்பூர்வ X (முந்தைய ட்விட்டர்) கணக்கில் ‘ட்ரூ டிஜிட்டல் ஃப்ரீடம்’ என்று பெயரிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வாடிக்கையாளர்கள் புதிய BSNL சிம் வாங்கினால், வெறும் 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு இந்த அனைத்து வசதிகளும் கிடைக்கும். இந்த திட்டத்தில் தேசிய ரோமிங், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உட்பட நாடு முழுவதும் அன்லிமிடேட் அழைப்புகள் அடங்கும்.
இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் நாட்டின் அனைத்து வட்டங்களிலும் பொருந்தும். வாடிக்கையாளர்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட BSNL மையத்திலிருந்தும் வெறும் 1 ரூபாய்க்கு புதிய சிம் கார்டை வாங்குவதன் மூலம் இந்த திட்டத்தைப் பெறலாம்.


