Asia Cup 2025 ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
🚨 A look at #TeamIndia‘s squad for #AsiaCup 2025 🔽 pic.twitter.com/3VppXYQ5SO
— BCCI (@BCCI) August 19, 2025
இந்திய அணி விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கே.), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஜிதேஷ் சர்மா
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்தது இதில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த அணியை பொறுத்தவரையில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். ஆட்டத்தை கண்ட்ரோல் செய்து ஆடுவதில் துணை கேப்டன் சுப்மன் கில் அனுபவம் பெரிய உதவியாக இருக்கும். அதே போல் மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல் ஆகிய அதிரடி ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி நெருக்கடி தரலாம். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பீரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ஆகியோர் உள்ளனர்.